Monday, July 6, 2009

விருஷபாத்ரி மகாத்மியம் - முதல் அத்யாயம் - பகுதி 2


ஸ்ரீஸூதர்: செளநகாதி மஹாமுனிவர்களே! நான் கேட்ட பிரகாரமும், எனக்குத் தெரிந்த வரையிலும் ஸ்ரீவிருஷபகிரியின் பெருமையை சொல்லுகிறேன். கவனமாக் கேளுங்கள். நித்ய ஸூரிகளான ஸ்ரீஸநகாதிகளால் நூற்றுக்கணக்கான வருஷங்களானாலும் வர்ணிக்க முடியாத நிகரற்ற அதன் பெருமையை என் போன்றவர்களால் வர்ணிக்கப்படுவது எவ்விதம் கூடும்? என்று எல்லா மஹரிஷிகளைப் பார்த்துச் சொல்லிவிட்டு, ஸ்ரீவிருஷபாசலத்தை நினைத்து, ஸ்ரீஸுந்தர்ராஜ மூர்த்தியை வணங்கி, நற்குணக்கடலில் ஆழ்ந்த மனதையுள்ளவராய்க் கொண்டு, அடிக்கடி மஹான்களால் தூண்டப்பட்டு, ப்ரஹ்மாசனத்தில் வீற்றிருந்து, ஸபையின் மத்தியில் அவர்களைப் பார்த்துச் சொல்லுகிறார்.

முனிவர்களே! உயர்குலப் பிறப்பை நான் அடையாமலிருந்த போதிலும், மஹான்களுடைய கருணையினால் பிறப்பினாலுண்டான தோஷம் நீங்கி உயர்வான ப்ராஹ்மண்யத்தை நான் இப்பால் அடைந்திருக்கிறேன். இவ்விதமான எனக்கு ப்ரஹ்மாசனங் கொடுத்து இந்தக் கதையை நீங்கள் கேட்பதால் உங்களுடைய அனுக்ரஹத்தினாலேயே சொல்லுகிறேன். எவ்வித குற்றங்களிருப்பினும் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

மலயபர்வதத்திற்கு வடக்கில் பத்து யோஜனை தூரத்திலும், காவேரி என்னும் ஸஹஜாநதிக்குத் தெற்கே ஆறு யோஜனை தூரத்திலும், வராஹ பர்வதத்திற்கு கிழக்கே ஆறு யோஜனை தூரத்திலும், கிழக்கு ஸமுத்திரத்திற்கு மேற்கே ஏழு யோஜனை தூரத்திலும், பூமிதேவிக்கு ஸ்தனம் போலுயர்ந்த ஸ்ரீவிருஷபாத்ரிஎன்று ப்ரஸித்தமான மலை உண்டு. இந்த விருஷபம் என்ற கிரிக்கு இதர பர்வதங்களை ஒப்பிடுங்கால் அவைகளெல்லாம் கேவலம் பசுக்கள் போலாகின்றன. மேலும் எல்லாப் பர்வதங்களைக் காட்டிலும் இம்மலை விசேஷப்ரக்யாதியை யடைந்திருந்தமையாலும் இந்த மலைக்கு விருஷபாத்ரி என்ற பெயர் முன்னோர்களால் வாய்ந்திட மற்றொரு காரணமும் ஆயிற்று. மேலும் யமதர்மன் விருஷஎன்ற தர்மரூபத்தோடு தபசு புரிந்து பகவானிட்த்தில் இம்மலைக்கு விருஷபாத்ரி என்று பெயரிடும்படி பிரார்த்தித்தான். மற்ற பர்வதங்களைக் காட்டிலும் உயர்ந்திருப்பதாலும், சந்திரன் ஸஞ்சரிப்பதாலும், இம்மலையைப் பெரியோர்களால் பர்வத ச்ரேஷ்டமென்று சொல்லுகின்றனர். இம்மலையை இதர பர்வதங்கள், அதனதன் குணவிசேஷங்களால் ஜயிக்கப்படாமலிருப்பதால் ஸிம்ஹாத்ரிஎன்று ப்ரஸித்தமாயிற்று. மேலும் ஸ்ரீகேசவருடைய ஸாந்நித்யத்தால் இது கேசவாத்ரி என்றும் கருதப்படுகிறது. மிகவும் செழிப்பும் அழகும் வாய்ந்ததான, நூறாயிரக்கணக்கான சோலைகளால் நிறைந்திருப்பதால், இம்மலையைச் சோலைமலை (உத்யானசைலம்) என்று முனிவர்கள் அடிக்கடி புகழ்கின்றனர்.

இம்மலையின் சிகரத்தில் ஸ்ரீமந்நாராயண மூர்த்தியின் பாதச்சிலம்பிலிருந்து பெருகியதான நதியொன்றுண்டு. ஜன்மஜன்மாந்தரங்களில் செய்த பாபங்களைப் போக்கடித்து விடுகிறதும், புண்யத்தைத் தருகிறதும், இகபரசுகத்தைத் தருவதாகவும் இருத்தலால் இந்நதிக்கு இஷ்டஸித்தி என்று பிரஸிட்தமுள்ள மற்றொரு பெயரும் உண்டு. பகவத் ஸரணாரவிந்த்த்தினின்று இடைவிடாமல் பெருகுகிறதும், பரமேச்வரன் ஜடாசம்பந்தமற்றதும், ஜன்ஹு மகரிஷியினால் உச்சிஷ்டம் செய்யப்படாத்தும், ஸம்சார பந்த்த்தினாலுண்டான அழுக்கைப் போக்கடிக்கிறதும், ஆச்ரயித்தவர்களின் புண்யத்தை அபிவ்ருத்தி செய்வதால் புண்யச்ருதி என்ற மற்றோர் பெயருடனும், ஸகல ஜனங்களுடைய ஜனனமான துக்கத்தை நீக்க்க் கூடியதால் பவஹாரிநதி என்ற மற்றும் ஓர் பெயருடனும், இந்த நூபுரகங்கா நதியானது விசேஷ க்யாதியுடன் ப்ரவஹிக்கிறது.

மேலும் இம்மலையானது ஸகல பாபங்களையும் அடியோடு துலைப்பதால் ஸவநாத்ரி (யக்ஞ பர்வதம்) என்று ஒரு பெயரை அடைந்திருக்கிறது. ப்ராஹ்மணக் கூட்டங்களாலும் ஸர்வகாலமும் ஆச்ரயிக்கப்பட்ட இந்த விருஷபாத்ரியானது முன்னோர்களாலும் விசேஷமாகப் போற்றப்பட்டிருக்கின்றது. நாற்புறங்களிலும் சிகரங்களோடு கூடினதும், சங்குபோன்றும், முத்துச் சிப்பி போன்றுமுள்ள காந்தியுள்ளதும், நாநாவிதமான பக்ஷிஜாலங்களால் நிறையப் பெற்றதாயுமுள்ள இந்த விருஷபாசலத்தை மஹரிஷிகள் நமஸ்கரிக்கின்றனர். ரிஷீச்வரர்களாலும், அநேக ப்ரஹ்மநிஷ்டர்களாலும் நிறைந்ததும், பலவித தாதுக்களால் நிறைந்ததுமான சிகரங்களோடு கூடிய இம்மலையானது ஆகாசத்தைப் பிளப்பதுபோலுமிருக்கிறது. சிலவிடங்களில் ஸ்வர்ணத்துக்கு சமானமான ப்ரகாசத்தோடும், மற்றும் சிலவிடங்களில் வெள்ளிக்கு ஒப்பான வர்ணத்தோடும், சிலவிடங்களில் மரஞ்சிஷ்ட்த்தைப் போல் மஞ்சள் நிறத்துடனும், சிலவிடங்களில் இரதனசிரேஷ்டங்களைப் போலும் சிலவிடங்களில் உயர்ந்த மாணிக்கத்தைப் போலும், சிலவிடங்களில் மரகதத்திற்கு சமானமான காந்தியுடனும், இவ்விதமாக, மற்றும் அநேக வர்ணங்களால் சூரியனின் பலவித தேஜஸ்ஸுகளையும் விசிறியடித்துக் காட்டுவது போல் இம்மலை ப்ரகாசிக்கின்றது. சிலவிடங்களில் தாழம்பூவின் ப்ரகாசத்தைப் போலும், சிலவிடங்களில் சந்திரிகையின் ப்ரகாசத்தைப் போலும், பற்பலவிதமாகவெல்லாம் தன்னிடமாகக் கொண்டு நிறைந்து நின்றுள்ள தாது விசேஷங்களால் இவ்விருஷபாத்ரியின் சிகரங்கள் ப்ரகாசித்து விளங்குகின்றது. மேலும் இக்கிரியானது, அலங்கரிக்கப்பட்டிருக்கிற அரசன் போலக் கொடி முடியில் ப்ரகாசிக்கும் சந்திரிகையால் அலங்கரிக்கப்பட்டு விளங்குகிறது.

9 comments:

said...

ஆஹா, நம்ம அழகர் மலைக்கு இம்புட்டு பெயர்களா?.

நீங்க இந்த தொடரை முடித்தபின்னர் இன்னுமொருமுறை போகவேண்டும் என்று இப்போதே தோன்றிவிட்டது ராகவ்.

ஆமாம், படத்தில் இருப்பது நம்ம அழகர் கோவில் பெருமாள் திருமஞ்சனமா?

said...

வாங்கண்ணா..நீங்க போகும்போது நானும் வரேன்..

வருடத்துக்கு ஒருமுறை அழகருக்கு நூபுரகங்கா அருவியில் ஸ்நானம் நடக்கும்.. அது முடிந்தவுடன் தைலக்காப்பு உற்சவமும் அற்புதமா இருக்கும்.. படங்கள் உங்க மெயிலுக்கு அனுப்பி வைக்கிறேன் அண்ணா.

said...

ஓ போகலாமே!, பெருமாள் அருளிருந்தால் கண்டிப்பாகப் போகலாம். :)

நீங்க சொன்ன பிறகு கவனித்தேன். படத்தில் நூபுர கங்கையில் இருக்கும் கோமுகத்தின் அடியில்தான் பெருமாள் திருமஞ்சனத்திற்கு ஏளியிருக்கார்.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

said...

விருது வாங்க வாங்க.
http://tharanipriyacbe.blogspot.com/2009/07/blog-post_26.html

said...

அட !! ராகவ், நீங்களும் பதிவு எழுத ஆரம்பித்து விட்டீர்களா? வாழ்த்துக்கள் !! :-)
பல ஆழ்வார்களும் பாடிப் பரவிய மலை.
"சிலம்பாறு பாயும் தென் திருமாலிருஞ்சோலை" என்று பெரியாழ்வார் பாடுகிறார்.

"'திருமாலிருஞ்சோலை மலை' என்றேன்; என்ன,
திருமால் வந்தென் நெஞ்சு நிறையப் புகுந்தான்..." என்று நம்மாழ்வார் இதன் பெருமையை பாடுகிறார்.
அருமையான topic. கலக்குங்க ! :-)

said...

ராகவ்: உங்கள் கதம்ப சாத்து பின்னூட்டத்திற்கு நன்றி. உங்கள எப்படி தொடர்பு கொள்ளரதுன்னு தெரில. அதுனால, இங்கயே சொல்லிக்கறேன்.
இப்படி மண்டை காய வச்சிடீங்களே. வயத்தெரிச்சல் குழம்புன்னா ஒருவேளை மிளகு குழம்போ??

(BTW உங்கள் பதிவுகள் ரொம்ப நன்றாக இருக்கிறதே(!)

-வித்யா

said...

விருஷபாத்ரி மகாத்மியம் அப்பாலிக்கா என்னாச்சி-ன்னு என் தோழியோட "அவன்" திடீர்-ன்னு கேட்கச் சொன்னானா? - அதான் கேட்டுட்டேன்! :)

பின்னூட்டம் இட்டாத் தான் தொடரைத் தொடர்வீகளோ? :))

said...

nicepost.பெருமாள் தரிசனம் அமோகமா இருக்கு.