Friday, June 19, 2009

ஸ்ரீவிருஷபாத்ரி மகாத்மியம் - முதல் அத்யாயம்எம்பெருமான் பெருந்தேவி நாயகி ஸமேத ஸ்ரீவரதராஜன் ஆசியுடன்,திருமாலிருஞ்சோலை கல்யாண சுந்தரவல்லீ ஸமேத ஸ்ரீசுந்தரராஜன்


அடி பணிந்து அவன் வைபவத்தை சொல்லும் ஸ்ரீவிருஷபாத்ரி மகாத்மியம் எனும் பழையதொரு நூலை இங்கு ஒருங்குறியில் எழுதிட உள்ளேன்..

என் அப்பன் வரதன் அருளுடன் முதல் அத்யாயத்தை தொடங்குகிறேன்.
_______________________________________________________________________________________

முதல் அத்யாயம் - ஷேத்ர வைபவம்

நைமிசாரண்யவாசிகளான மஹரிஷிகளானவர்கள் தாங்கள் காலையில் செய்ய வேண்டிய ’ஜப தப’ ஹோமாதிகளை செய்தபின் பகவத்பக்தியில் ஈடுபட்டுள்ளவர்களாய் ஒன்று கூடி, பதிணென் புராணங்களையும் வெளியிட்டவரான ஸ்ரீவேதவியாஸ மஹாமுனிவரின் சிஷ்யரும், எல்லாப் புராணங்களின் மர்மங்களையும் அறிந்த ஸ்ரீஸூத மஹாமுனிவரை அழைத்து பிரஹ்மாசனத்தில் வீற்றிருக்கச் செய்து சொல்லுகின்றனர்.

ரிஷிகள் : ”அறிவாளிகளுக்குள் சிறந்த ஸூத மஹாமுனிவரே இதற்குமுன் பல புராணங்களை தங்களிடமிருந்து கேட்டிருக்குறோம். பர்வதங்களுடைய விசேஷங்களும், ஸமுத்ரங்களின் விபரங்களும், ஏழு ஸ்தானங்களை ஆஸ்ரயித்த த்வீபங்களின் விஷயங்களும் அதிக புண்யமயமான தீர்த்தங்களின் பெருமைகளும், பெரிய நகரங்களின் அமைப்புகளும், ஸாமான்ய தர்மங்களும், மிகவும் சிரமத்தின் பேரில் செய்யக்கூடிய அனேகம் விசேஷ தர்மங்களும், ப்ரஹ்ம, ஷத்ரிய, வைஷ்ய, சூத்ரர்களுடையவும், அநுலோம, ப்ரதிலோமர்களுடைய ஸ்வரூபங்களும் அவர்களுடைய தொழிலும், ரஹஸ்யமானதும், ப்ரகாசமானதும் மற்றும் செய்யத்தக்கதும், செய்யத்தகாததும் இகபர சுகத்தைத் தரக்கூடிய தர்மங்களும், ந்யாய அந்யாயங்களின் ஸ்வரூபமும் மற்றும் செய்கைக்குத் தகுந்த பலனைக் கொடுக்கக்கூடிய தர்மங்களும், யாவற்றுக்கும் பிரபுவான ஸ்ரீபகவானுடைய ச்ரேஷ்டமான ஸாத்வீக புராணங்களிலிருந்து தங்களிடம் கேட்டிருக்குறோம்.

முன் வராஹபுராண வரலாற்றைச் சொல்லிவருகையில் பெருமைதங்கிய ஸ்ரீபாண்டியநாட்டில் எப்பொழுதும் பகவத் ஸாந்நித்யம் பொருந்திய ஸ்ரீ விருஷபாத்ரியின் பெருமையை சுலபமாகச் சொல்லி இருக்கிறீர்கள். அவ்விருஷபாத்ரியின் இருப்பிடமும், அதன் மஹாத்மியமும் அறிய விரும்புகிற எங்களுக்கு ஸர்வ புராணார்த்தங்களை அறிந்த தாங்கள் உள்ளபடி விபரமாகக் கூறும்படி பிராத்திக்கின்றோம். அமுதபானம் செய்பவனுக்கு போதுமென்ற த்ருப்தி வராதது போல், தங்களுடைய முகாரவிந்தத்திலிருந்து பெருகுகிற ஸ்ரீவிஷ்ணு கதாம்ருதபானாஸக்தர்களான எங்களுடைய தாபத்தை உங்களுடைய கருணாம்ருதவர்ஷத்தினால் விலக்கி, போக மோக்ஷங்களைக் கொடுக்கும் ஷேத்ரங்களுள் உத்தம்மும், தேவர்கட்கும், மனிதர்கட்கும் சுபாஸ்தன ”ஸ்ரீவிருஷப கிரி” ஷேத்ரத்தின் மஹாத்மியத்தை கேட்க ஆவல் கொண்டிருக்கிறோம்.

எப்பொழுதும் பகவத்சிந்தனாபரர்களான செளநகாதி மஹாமுனிவர்களால் இவ்விதம் கேட்கப்பட்ட ஸ்ரீஸூத மஹாமுனிவர், உலகக்ஷேமங்களை விரும்பும் தங்களால் ஷாட்குண்ய பரிபூர்ணரான ”ஸ்ரீசுந்தரராஜர் நினைக்கும்படி செய்யப்பட்டார் என்று சொல்லி, ரிஷிகளுக்குள் தலைவரும், ஸ்ரீமந்நாராயணாம்சபூதரும், தனக்கு பரமாசார்யருமான ஸ்ரீவேத வியாச மஹாமுனிவரை வணங்கி பின்வருமாறு சொல்கிறார்.

தொடரும்....

10 comments:

said...

நல்ல ஆரம்பம்...படிக்கக் காத்திருக்கிறேன் ராகவ்.

said...

மிக நல்ல கைங்கர்யத்தைத் தொடங்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். If you type with double space it will be easy for reading.

said...

நன்றி மெளலி அண்ணா.. உங்க ஆசி இருந்தாலே போதும்... விரைவில் முடித்து விடுவேன்..


நன்றி ரகுவீரதயாள் அண்ணா.. தாங்கள் சொன்னபடி தட்டச்சுகிறேன்..

said...

அருமை இராகவ். தொடர்ந்து இயன்ற போதெல்லாம் எழுதுங்கள்.

said...

nalla aarambam...thodarunga

Anand S said...

Many thanks for starting the series on Lord Sri Alagar and his divine abode Alagar Hills [vrishabhathri].

said...

ராகவ்,
முதல் முறையா உங்க வலைத்தளத்துக்கு வந்திருக்கிறேன்.
இந்த படத்தில் உள்ள வரதர், எந்த கோவிலில் குடி கொண்டுள்ளார்? நாங்கள் இருவரும் காஞ்சி வரதரின் தீவிர Fanatics என்றே சொல்லலாம். அருமையான பகிர்வு. ஏன் அடிக்கடி எழுதுவதில்லை?

said...

வாங்க அனன்யா.. நானும் காஞ்சி வரதன் தாஸன் தான்.. அவரின் சிரிப்புக்கும், விரிந்த மார்புக்கும், கவலைப்படாதே என்று காட்டும் ஹஸ்தத்திற்கும் முன் உள்ளம் உருகி நிற்பவன்..

இங்குள்ளவர்.. எங்க ஊர் வரதர்.. மதுரை - இராமேஸ்வரம் செல்லும் வழியில் பரமக்குடி அருகில் உள்ள எமனேஸ்வரம் எனும் சுறு ஊரில் கோவில் கொண்டுள்ளவர்..

நேரம் கிடைத்தால் இந்த வீடியோஸ் பாருங்க

http://www.youtube.com/watch?v=YsNcQ7KKdbI

http://www.youtube.com/watch?v=ezXYIpFqDWg&feature=channel

said...

Dear Raghav,
I saw both the videos. Thankyou for making my Day!
காலங்கார்த்தால கோவில் தரிசனம்! அதுவும் மூலவர் வரதர் கொள்ளை அழகு. அவருக்கு அனுப்பியாச்சு. இன்னிக்கி நாள் ரொம்ப நன்னா இருக்கும். I can be rest assured! :) Thanks so much.

said...

நம்மூர் அதான், பாலக்காடு கோவிந்தராஜபுரம் வரதர் படங்கள் இங்கே பார்க்க:
http://picasaweb.google.com/shyammurthy007/GOVINDARAJAPURAM?feat=embedwebsite#