Wednesday, October 14, 2009

வேலைவாய்ப்பு பதிவு: HSBC மற்றும் EMC Bangalore

நண்பர்களே, கீழ்க்கண்ட வேலைவாய்ப்புகளுக்கு உங்களுக்குத் தெரிந்தவர்கள் இருந்தால் எனக்கு devanraghav@gmail.com என்ற முகவரிக்கு Resume அனுப்பச் சொல்லுங்கள்.

Company : HSBC Bank (Position is not for banking job)
Devision : Analytics devision
Experience : 1+ years
Position open : 4
Qualification: MCA or BE
Skills : SQL, Database, Data warehousing.

Company : EMC Data storage system
Position: S/W Engineer
Experience : 2+ years
Qual : MCA or BE
Skills : Strong skills in C, Data structure and unix.

நன்றி.

Monday, July 6, 2009

விருஷபாத்ரி மகாத்மியம் - முதல் அத்யாயம் - பகுதி 2


ஸ்ரீஸூதர்: செளநகாதி மஹாமுனிவர்களே! நான் கேட்ட பிரகாரமும், எனக்குத் தெரிந்த வரையிலும் ஸ்ரீவிருஷபகிரியின் பெருமையை சொல்லுகிறேன். கவனமாக் கேளுங்கள். நித்ய ஸூரிகளான ஸ்ரீஸநகாதிகளால் நூற்றுக்கணக்கான வருஷங்களானாலும் வர்ணிக்க முடியாத நிகரற்ற அதன் பெருமையை என் போன்றவர்களால் வர்ணிக்கப்படுவது எவ்விதம் கூடும்? என்று எல்லா மஹரிஷிகளைப் பார்த்துச் சொல்லிவிட்டு, ஸ்ரீவிருஷபாசலத்தை நினைத்து, ஸ்ரீஸுந்தர்ராஜ மூர்த்தியை வணங்கி, நற்குணக்கடலில் ஆழ்ந்த மனதையுள்ளவராய்க் கொண்டு, அடிக்கடி மஹான்களால் தூண்டப்பட்டு, ப்ரஹ்மாசனத்தில் வீற்றிருந்து, ஸபையின் மத்தியில் அவர்களைப் பார்த்துச் சொல்லுகிறார்.

முனிவர்களே! உயர்குலப் பிறப்பை நான் அடையாமலிருந்த போதிலும், மஹான்களுடைய கருணையினால் பிறப்பினாலுண்டான தோஷம் நீங்கி உயர்வான ப்ராஹ்மண்யத்தை நான் இப்பால் அடைந்திருக்கிறேன். இவ்விதமான எனக்கு ப்ரஹ்மாசனங் கொடுத்து இந்தக் கதையை நீங்கள் கேட்பதால் உங்களுடைய அனுக்ரஹத்தினாலேயே சொல்லுகிறேன். எவ்வித குற்றங்களிருப்பினும் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

மலயபர்வதத்திற்கு வடக்கில் பத்து யோஜனை தூரத்திலும், காவேரி என்னும் ஸஹஜாநதிக்குத் தெற்கே ஆறு யோஜனை தூரத்திலும், வராஹ பர்வதத்திற்கு கிழக்கே ஆறு யோஜனை தூரத்திலும், கிழக்கு ஸமுத்திரத்திற்கு மேற்கே ஏழு யோஜனை தூரத்திலும், பூமிதேவிக்கு ஸ்தனம் போலுயர்ந்த ஸ்ரீவிருஷபாத்ரிஎன்று ப்ரஸித்தமான மலை உண்டு. இந்த விருஷபம் என்ற கிரிக்கு இதர பர்வதங்களை ஒப்பிடுங்கால் அவைகளெல்லாம் கேவலம் பசுக்கள் போலாகின்றன. மேலும் எல்லாப் பர்வதங்களைக் காட்டிலும் இம்மலை விசேஷப்ரக்யாதியை யடைந்திருந்தமையாலும் இந்த மலைக்கு விருஷபாத்ரி என்ற பெயர் முன்னோர்களால் வாய்ந்திட மற்றொரு காரணமும் ஆயிற்று. மேலும் யமதர்மன் விருஷஎன்ற தர்மரூபத்தோடு தபசு புரிந்து பகவானிட்த்தில் இம்மலைக்கு விருஷபாத்ரி என்று பெயரிடும்படி பிரார்த்தித்தான். மற்ற பர்வதங்களைக் காட்டிலும் உயர்ந்திருப்பதாலும், சந்திரன் ஸஞ்சரிப்பதாலும், இம்மலையைப் பெரியோர்களால் பர்வத ச்ரேஷ்டமென்று சொல்லுகின்றனர். இம்மலையை இதர பர்வதங்கள், அதனதன் குணவிசேஷங்களால் ஜயிக்கப்படாமலிருப்பதால் ஸிம்ஹாத்ரிஎன்று ப்ரஸித்தமாயிற்று. மேலும் ஸ்ரீகேசவருடைய ஸாந்நித்யத்தால் இது கேசவாத்ரி என்றும் கருதப்படுகிறது. மிகவும் செழிப்பும் அழகும் வாய்ந்ததான, நூறாயிரக்கணக்கான சோலைகளால் நிறைந்திருப்பதால், இம்மலையைச் சோலைமலை (உத்யானசைலம்) என்று முனிவர்கள் அடிக்கடி புகழ்கின்றனர்.

இம்மலையின் சிகரத்தில் ஸ்ரீமந்நாராயண மூர்த்தியின் பாதச்சிலம்பிலிருந்து பெருகியதான நதியொன்றுண்டு. ஜன்மஜன்மாந்தரங்களில் செய்த பாபங்களைப் போக்கடித்து விடுகிறதும், புண்யத்தைத் தருகிறதும், இகபரசுகத்தைத் தருவதாகவும் இருத்தலால் இந்நதிக்கு இஷ்டஸித்தி என்று பிரஸிட்தமுள்ள மற்றொரு பெயரும் உண்டு. பகவத் ஸரணாரவிந்த்த்தினின்று இடைவிடாமல் பெருகுகிறதும், பரமேச்வரன் ஜடாசம்பந்தமற்றதும், ஜன்ஹு மகரிஷியினால் உச்சிஷ்டம் செய்யப்படாத்தும், ஸம்சார பந்த்த்தினாலுண்டான அழுக்கைப் போக்கடிக்கிறதும், ஆச்ரயித்தவர்களின் புண்யத்தை அபிவ்ருத்தி செய்வதால் புண்யச்ருதி என்ற மற்றோர் பெயருடனும், ஸகல ஜனங்களுடைய ஜனனமான துக்கத்தை நீக்க்க் கூடியதால் பவஹாரிநதி என்ற மற்றும் ஓர் பெயருடனும், இந்த நூபுரகங்கா நதியானது விசேஷ க்யாதியுடன் ப்ரவஹிக்கிறது.

மேலும் இம்மலையானது ஸகல பாபங்களையும் அடியோடு துலைப்பதால் ஸவநாத்ரி (யக்ஞ பர்வதம்) என்று ஒரு பெயரை அடைந்திருக்கிறது. ப்ராஹ்மணக் கூட்டங்களாலும் ஸர்வகாலமும் ஆச்ரயிக்கப்பட்ட இந்த விருஷபாத்ரியானது முன்னோர்களாலும் விசேஷமாகப் போற்றப்பட்டிருக்கின்றது. நாற்புறங்களிலும் சிகரங்களோடு கூடினதும், சங்குபோன்றும், முத்துச் சிப்பி போன்றுமுள்ள காந்தியுள்ளதும், நாநாவிதமான பக்ஷிஜாலங்களால் நிறையப் பெற்றதாயுமுள்ள இந்த விருஷபாசலத்தை மஹரிஷிகள் நமஸ்கரிக்கின்றனர். ரிஷீச்வரர்களாலும், அநேக ப்ரஹ்மநிஷ்டர்களாலும் நிறைந்ததும், பலவித தாதுக்களால் நிறைந்ததுமான சிகரங்களோடு கூடிய இம்மலையானது ஆகாசத்தைப் பிளப்பதுபோலுமிருக்கிறது. சிலவிடங்களில் ஸ்வர்ணத்துக்கு சமானமான ப்ரகாசத்தோடும், மற்றும் சிலவிடங்களில் வெள்ளிக்கு ஒப்பான வர்ணத்தோடும், சிலவிடங்களில் மரஞ்சிஷ்ட்த்தைப் போல் மஞ்சள் நிறத்துடனும், சிலவிடங்களில் இரதனசிரேஷ்டங்களைப் போலும் சிலவிடங்களில் உயர்ந்த மாணிக்கத்தைப் போலும், சிலவிடங்களில் மரகதத்திற்கு சமானமான காந்தியுடனும், இவ்விதமாக, மற்றும் அநேக வர்ணங்களால் சூரியனின் பலவித தேஜஸ்ஸுகளையும் விசிறியடித்துக் காட்டுவது போல் இம்மலை ப்ரகாசிக்கின்றது. சிலவிடங்களில் தாழம்பூவின் ப்ரகாசத்தைப் போலும், சிலவிடங்களில் சந்திரிகையின் ப்ரகாசத்தைப் போலும், பற்பலவிதமாகவெல்லாம் தன்னிடமாகக் கொண்டு நிறைந்து நின்றுள்ள தாது விசேஷங்களால் இவ்விருஷபாத்ரியின் சிகரங்கள் ப்ரகாசித்து விளங்குகின்றது. மேலும் இக்கிரியானது, அலங்கரிக்கப்பட்டிருக்கிற அரசன் போலக் கொடி முடியில் ப்ரகாசிக்கும் சந்திரிகையால் அலங்கரிக்கப்பட்டு விளங்குகிறது.

Friday, June 19, 2009

ஸ்ரீவிருஷபாத்ரி மகாத்மியம் - முதல் அத்யாயம்



எம்பெருமான் பெருந்தேவி நாயகி ஸமேத ஸ்ரீவரதராஜன் ஆசியுடன்,



திருமாலிருஞ்சோலை கல்யாண சுந்தரவல்லீ ஸமேத ஸ்ரீசுந்தரராஜன்


அடி பணிந்து அவன் வைபவத்தை சொல்லும் ஸ்ரீவிருஷபாத்ரி மகாத்மியம் எனும் பழையதொரு நூலை இங்கு ஒருங்குறியில் எழுதிட உள்ளேன்..

என் அப்பன் வரதன் அருளுடன் முதல் அத்யாயத்தை தொடங்குகிறேன்.
_______________________________________________________________________________________

முதல் அத்யாயம் - ஷேத்ர வைபவம்

நைமிசாரண்யவாசிகளான மஹரிஷிகளானவர்கள் தாங்கள் காலையில் செய்ய வேண்டிய ’ஜப தப’ ஹோமாதிகளை செய்தபின் பகவத்பக்தியில் ஈடுபட்டுள்ளவர்களாய் ஒன்று கூடி, பதிணென் புராணங்களையும் வெளியிட்டவரான ஸ்ரீவேதவியாஸ மஹாமுனிவரின் சிஷ்யரும், எல்லாப் புராணங்களின் மர்மங்களையும் அறிந்த ஸ்ரீஸூத மஹாமுனிவரை அழைத்து பிரஹ்மாசனத்தில் வீற்றிருக்கச் செய்து சொல்லுகின்றனர்.

ரிஷிகள் : ”அறிவாளிகளுக்குள் சிறந்த ஸூத மஹாமுனிவரே இதற்குமுன் பல புராணங்களை தங்களிடமிருந்து கேட்டிருக்குறோம். பர்வதங்களுடைய விசேஷங்களும், ஸமுத்ரங்களின் விபரங்களும், ஏழு ஸ்தானங்களை ஆஸ்ரயித்த த்வீபங்களின் விஷயங்களும் அதிக புண்யமயமான தீர்த்தங்களின் பெருமைகளும், பெரிய நகரங்களின் அமைப்புகளும், ஸாமான்ய தர்மங்களும், மிகவும் சிரமத்தின் பேரில் செய்யக்கூடிய அனேகம் விசேஷ தர்மங்களும், ப்ரஹ்ம, ஷத்ரிய, வைஷ்ய, சூத்ரர்களுடையவும், அநுலோம, ப்ரதிலோமர்களுடைய ஸ்வரூபங்களும் அவர்களுடைய தொழிலும், ரஹஸ்யமானதும், ப்ரகாசமானதும் மற்றும் செய்யத்தக்கதும், செய்யத்தகாததும் இகபர சுகத்தைத் தரக்கூடிய தர்மங்களும், ந்யாய அந்யாயங்களின் ஸ்வரூபமும் மற்றும் செய்கைக்குத் தகுந்த பலனைக் கொடுக்கக்கூடிய தர்மங்களும், யாவற்றுக்கும் பிரபுவான ஸ்ரீபகவானுடைய ச்ரேஷ்டமான ஸாத்வீக புராணங்களிலிருந்து தங்களிடம் கேட்டிருக்குறோம்.

முன் வராஹபுராண வரலாற்றைச் சொல்லிவருகையில் பெருமைதங்கிய ஸ்ரீபாண்டியநாட்டில் எப்பொழுதும் பகவத் ஸாந்நித்யம் பொருந்திய ஸ்ரீ விருஷபாத்ரியின் பெருமையை சுலபமாகச் சொல்லி இருக்கிறீர்கள். அவ்விருஷபாத்ரியின் இருப்பிடமும், அதன் மஹாத்மியமும் அறிய விரும்புகிற எங்களுக்கு ஸர்வ புராணார்த்தங்களை அறிந்த தாங்கள் உள்ளபடி விபரமாகக் கூறும்படி பிராத்திக்கின்றோம். அமுதபானம் செய்பவனுக்கு போதுமென்ற த்ருப்தி வராதது போல், தங்களுடைய முகாரவிந்தத்திலிருந்து பெருகுகிற ஸ்ரீவிஷ்ணு கதாம்ருதபானாஸக்தர்களான எங்களுடைய தாபத்தை உங்களுடைய கருணாம்ருதவர்ஷத்தினால் விலக்கி, போக மோக்ஷங்களைக் கொடுக்கும் ஷேத்ரங்களுள் உத்தம்மும், தேவர்கட்கும், மனிதர்கட்கும் சுபாஸ்தன ”ஸ்ரீவிருஷப கிரி” ஷேத்ரத்தின் மஹாத்மியத்தை கேட்க ஆவல் கொண்டிருக்கிறோம்.

எப்பொழுதும் பகவத்சிந்தனாபரர்களான செளநகாதி மஹாமுனிவர்களால் இவ்விதம் கேட்கப்பட்ட ஸ்ரீஸூத மஹாமுனிவர், உலகக்ஷேமங்களை விரும்பும் தங்களால் ஷாட்குண்ய பரிபூர்ணரான ”ஸ்ரீசுந்தரராஜர் நினைக்கும்படி செய்யப்பட்டார் என்று சொல்லி, ரிஷிகளுக்குள் தலைவரும், ஸ்ரீமந்நாராயணாம்சபூதரும், தனக்கு பரமாசார்யருமான ஸ்ரீவேத வியாச மஹாமுனிவரை வணங்கி பின்வருமாறு சொல்கிறார்.

தொடரும்....

Thursday, June 18, 2009

32 ரகசியங்கள்

என்ன எழுதுவதென்றே தெரியாமல் இருந்தேன்.. முதலில் என்னைப் பற்றி எழுதுமாறு கூடல் குமரன் இழுத்து விட்டுருக்கார்.. என்னைப் பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கங்க..

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

என் தாத்தாவோட பெயர் இது.. எங்க தாத்தா தான் தன்னோட பேரை எனக்கு வைச்சாரு.. அது மட்டுமில்லாம நான் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவன் ஆதலால் அந்த ஸ்ரீராமபிரானின் பெயராகவும் அமைந்து விட்டது... என்ன நான் கொஞ்சம் வளர்ந்து சேட்டை பண்ண ஆரம்பிச்ச பிறகு.. பாட்டி எனக்கு ராகவனு பேர் வைச்சதுக்கு பதிலா ராவணன்னு பேர் வைச்சுருக்கலாம்னு சொல்ல ஆரம்பிச்சாட்டாங்க :)



2. கடைசியாக அழுதது எப்பொழுது?

ஜனவரி 26, 2008 அன்று இரவு மறுநாள் இரவு இறக்கப் போகும் எனது அப்பாவிற்காக யாருக்கும் சொல்லாமல் தெரியாமல் அழுதேன். அதற்குப் பின் எதற்கும் அழத் தோன்றியதில்லை.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
எனக்கு என்னிடம் ரொம்ப பிடித்ததே எனது கையெழுத்து தான்.. ஏன்னா பிடிக்கிற மாதிரி வேற ஒண்ணுமே இல்ல :)


4.பிடித்த மதிய உணவு என்ன?

சாம்பார், உருளைக்கிழங்கு பொடிமாஸ்,எலுமிச்சை சாதம், புளியோதரை, தயிர் சாதம்.


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ம்ம்.. அவ்வளவா கிடையாது.. கொஞ்சம் நாள் ஆகனும்..

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
அருவியில்.. வருஷா வருஷம் தவறாம குற்றாலம் போய் ஒரு வாரம் ஆட்டம் போட்டு வருவேன்.. கடல் குளியல் கொஞ்சம் அலர்ஜி..


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகம்.. அழகு முகமாக இருந்தால் வேறு பக்கமே திரும்ப மாட்டேன் :)

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடித்த விஷயம் ஒவ்வொரு வருடமும் தவறாமல் எங்க ஊர் வைகாசித் திருவிழாவிற்கு வரதராஜனின் அழகைக் காணச் செல்வது.
பிடிக்காதது சோம்பல்தனம்.. :)

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

ஹி ஹி... இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல இன்னும் காலம் வரவில்லை

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

என் அண்ணா பொண்ணு ஸ்ரீநிதி.. அவளுக்கு என்னையும், எனக்கு அவளையும் ரொம்ப்ப்ப்ப பிடிக்கும்.. அவளை ஸ்ரீகுட்டின்னு நான் மட்டும் தான் கூப்புடணும்னு அவளோட கண்டிஷன்.


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

கருப்பு ஷார்ட்ஸ் , வெள்ளை பனியன்.


12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

சன் மியூசிக்கில் நகைச்சுவை காட்சிகள்

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

நீலம்... ரொம்ப பிடிச்ச வர்ணம்


14.பிடித்த மணம் ?

மழைக்கு முன்/பின் வரும் மண் வாசம் பிடிக்கும்..
பழைமையான கோவில் கருவறைகளின் வாசம்

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

எனக்கு ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தையும், தேசிகர் அருளிச்செயல்களையும் அறிமுகப்படுத்திய எனது அருமை அண்ணா.. வீர வைஷ்ணவர்.. பரவஸ்து சுந்தர் அண்ணா..

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

குமரனின் அனைத்து பதிவுகளுமே பிடிக்கும்.. அவரின் அழகிய தமிழுக்காகவே பிடிக்கும்.. குறிப்பாக அவர் தரும் பாசுர விளக்கங்கள்.


17. பிடித்த விளையாட்டு?
கிரிக்கெட்.. முந்தி ரொம்ப வெறியா இருந்தேன்.. இப்போ தொலைக்காட்சியில் பார்ப்பதோடு சரி

18.கண்ணாடி அணிபவரா?
ஆமாம்.. -6 :(

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

நகைச்சுவைப் படங்கள் ரொம்ப பிடிக்கும். ரஜினி படங்கள் அனைத்தும் பிடிக்கும்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

99 ஹிந்திப் படம்.. 2.30 மணிநேரம் சிரித்து விட்டு வந்தேன்

21.பிடித்த பருவ காலம் எது?

குளிர் காலம்.. மார்கழிக் குளிர்னா ரொம்ப பிடிக்கும்

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

SCSI Bench Reference :)

23.உங்கள் டெஸ்க்டொப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

அடிக்கடி மாத்துவேன்.. ஆனா அதுவும் பெருமாள் படமா தான் இருக்கும்... பார்த்தனும், அரங்கனும், வரதனும் தான் மாறி மாறி வருவர்.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

ரயில் போகும் சத்தம் ரொம்ப பிடிக்கும்..
பெங்களுர் சாலையில் ட்ராபிக் ஹாரன் சத்தம் பெரும் இம்சை..

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

மயாமி பீச், அமெரிக்கா.


26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
சில திறமைகள் இருக்கு.. ஆனா தனித்திறமைன்னு சொல்ல முடியாது

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
தன்னை விட எளியவர்களை துன்புறுத்துதல்..

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
சோம்பல் தனம் தான்.. அதனாலே பெரிதாக சாதிக்க முடியவில்லை.. :(

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
பாரிஸ்.. போகணும்னு ரொம்ப நாளா ஆசை.. :)

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

எதை பற்றியும் கவலை படாமல் எந்தக் கவலையும் இல்லாம இருக்கணும்னு ஆசை

31.கணவன் செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

கல்யாணம் ஆனபின் சொல்றேனே..

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்க்கை அழகானது.

Friday, April 3, 2009

வேலைவாய்ப்பு பதிவு - EMC - 1 to 4 Year Experinced Candidates

நண்பர்களே நான் வேலை பார்க்கும் EMC, Bangalore நிறுவனத்தில் கீழ்க்கண்ட இடங்களுக்கு பொறியாளர்கள் தேர்வு நடக்க உள்ளது.. தங்களுக்கு தெரிந்தவ்ர்கள் யாராவது பொருத்தமானவர்கள் இருந்தால் எனக்கு devanraghav@gmail.com க்கு Resume அனுப்பவும்.

நன்றி.

Software Engineer C ,C++ - Win 32 ,Windows Internals ,File Sysytem 2 - 4 Years
Software Engineer Java, C++ 2 - 5 Years
Software Engineer Java,JSP,UI Design 2 - 4 Years
Technical Writer Technical Writing skills 2 - 4 Years
Telecom Billing Analyst Microsoft Excel ;solid understanding of US cellular terms  1 - 2 Years

Monday, February 23, 2009

வேலைவாய்ப்பு - 2008ல் தேர்வான பொறியாளர்களுக்கு மட்டும்

நண்பர்களே, 2008 ல் தேர்வான B.E/B.Tech CS, IT, IS & ECE தேர்வானவர்களுக்கு மட்டும் என் அலுவலகத்தில் (EMC, Bangalore) Associate Technical support Engineer இடத்திற்கு தேர்வு நடைபெற உள்ளது. 

தகுதி உள்ளவர்கள் எனக்கு devanathan_raghavan@emc.com என்ற முகவரிக்கு தங்களது BioData வை அனுப்பி வைக்கலாம். குறிப்பிட்ட தகுதி உள்ளவர்களை மட்டும் என்னால் தேர்வுக்குழுவிற்கு அனுப்பி வைக்க முடியும். வரும் புதன்கிழமை பிப்ரவரி 25ம் தேதி கடைசி நாள்

EMC (www.emc.com) is looking for Young, Vibrant and Dynamic Students to be a part of EMC.  We are looking at people for the position of Associate Technical Support Engineer with our PREM  Team (Global Services Team).

ELIGIBILITY CRITERIA FOR THE TEST:

Year of Passing : Candidates who have graduated in 2008 alone will be considered.
Academic Performance : 60 % and above in Std X & XII & 70% and above in UG.  
Disciplines : BE/ BTech – CS, IT, IS & ECE. Other disciplines won’t be considered for this event.

The referred students would be intimated directly about the selection process within the next 2 weeks.

Selection process
The selection process involves a Spoken English Test and those clearing the same will be taken through a written test . Candidates who clear the written test will a have technical Interview followed by a HR interview. 
____________________________________________________________________

வாழ்த்துக்களுடன்
இராகவன்.


Tuesday, January 13, 2009

வேலை வாய்ப்பு பதிவு - HP நிறுவனம் - 2008ல் தேர்வானவர்களுக்கு மட்டும்


பாலைவனத்தில் தண்ணீர் கிடைக்காவிட்டாலும், ஒரு ஒட்டகம் கிடைத்தால் நல்லது தானே.. HP நிறுவனத்தில் Freshers தேவைப்படுவதாக என் நண்பன் மின்னஞ்சல் அனுப்பியிருந்தான். 

விவரங்கள் கீழே.. Resume அனுப்ப நினைப்பவர்கள், படத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் Resumeஐ நாளைக்குள் அனுப்பவும்.  

வெள்ளிக்கிழமை , நேர்காணலின் போது HP யில் பணிபுரியும் ஒருவரது பெயர் மற்றும் அவரின் அடையாள அட்டை எண் (ID Card #) கொடுக்க வேண்டும்.. தேவைப்படுபவர்கள் எனக்கு ragulmca@yahoo.co.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினால் எனது நண்பரின் விவரம் தருவேன்..

படத்தில் உள்ள விவரங்கள் சரியாக தெரியவில்லை என்று பவானி சங்கர் சொன்னார்.. முக்கிய தகவல்கள் இதோ..

Job Title : System Engineer
Work location : Bangalore
Qualification : B.E/B.Tech from Electrical & Electronics/ Electronics & communication/ Instrumentation   Engg, Telecommunication.
Eligibility : 60% Aggregate, 2008 passout only

Venue : THE OXFORD COLLEGE OF ENGINEERING, BOMMANAHALLI (Near Wipro office), Hosur Rd
  Bangalore
Date : 16th January
Time : Registration: 8- 8.30AM

Sed CV's to lakshmi.arikere@hp.com by Wednesday January 14.

Wednesday, November 5, 2008

வேலைவாய்ப்பு பதிவு: EMC - 1 - 3 வருட அனுபவஸ்தர்களுக்கானது..

மக்கள்ஸ், நிறைய பேருக்கு Storage Domain பத்தி தெரியாதுன்னு நினைக்கிறேன். நிறைய இடங்கள்ல இப்போ புதுசா தேர்ந்தெடுக்குறத நிறுத்தி வச்சுருக்காங்க..  ஆனா எங்க நிறுவனத்துல நிறையவே தேவைகள் இருக்கு.. சில வாய்ப்புகளா மட்டும் இங்க பதிவிட்டுள்ளேன்.. மற்றவை பின்பு..
Position  Payroll Analyst

Experience  1 - 4 Years

# of Positions : 2

______________________________________________________________________________________

Position  Software Engineer

Experience  2 - 4 Years

# of Positions : 2

Requirements : Experience installing and configuring software, C++ programming. Experience at user and administrative levels on multiple computer platforms (Windows, Solaris, AIX, HP-UX, and Linux), Appropriate system troubleshooting/debugging.

______________________________________________________________________________________

Position  Associate Practice consultant

Experience  1 - 3 Years

# of Positions : 2

Requirements : BSc, MS Access, Excel
______________________________________________________________________________________

ragulmca@yahoo.co.in என்ற முகவரிக்கு மெயில் அனுப்பலாம். 


Friday, October 24, 2008

வேலை வாய்ப்பு.. EMC நிறுவனத்தில்

நண்பர்களே என் அலுவலகத்தில் அவ்வப்போது வரும் வேலைவாய்ப்பு செய்திகளை இங்கு பதியலாம் என்று உள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் ragulmca@yahoo.co.in மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.  நாளை மதியம் நான் ஊருக்கு கிளம்புகிறேன். அதற்குள் அனுப்பினால் என்னால் Upload செய்ய முடியும். நேர்முகத் தேர்வு அக்டோபர் 29 முதல் நவம்பர் 1 வரை அதனால் முடிந்தவரை 29க்குள் Resume அனுப்பலாம்.
Number of positions : 32 
Mandatory Skills:    
  • Windows or Any UNIX  - OS trouble shooting and configuration
    • File system management
    • Security Management
    • Configuration of HW
    • TCP/IP protocols                              

Desirable Skill :  

  •  Enterprise Product support background  
  •  Storage and Backup knowledge are desirable and not a must

 

Experience Level : 2-6 yrs with BE / MCA and 4-8yrs with Non-BE/MCA 

 

Type of support  Voice+Webex  

 

Shift Timings: 3:00 PM - 12:00 AM, 9:00 PM - 6:00 AM  

Wednesday, October 22, 2008

உண்மையான உலக நாயகன்

எத்தனையோ உலக நாயகர்கள் கேள்விப்பட்டுருப்பீங்க.. பாத்துருப்பீங்க, ஆனா உண்மையான உலக நாயகன் யார் தெரியுமா ??

அந்த கேள்விக்கு விடை தேடி நம்ம நாயகன் (கமல் கிடையாது), உலகமெல்லாம் சுற்றுப் பயணம் போனான்.. கடைசியில் கண்டுபிடித்த பதில் தான் கீழே வீடியோவாக தொகுக்கப்பட்டுள்ளது..

இந்த வீடியோவ பாத்துட்டு, நீங்க அவன் பொய் சொல்றவன்ன்னு நினைக்க வாய்ப்புகள் உண்டு.. ஆனாலும் அவன் பொய்கள் மகிழ்ச்சியைத் தான் கொடுக்கும்கிறதுக்கு எடுத்துக்காட்டு தான் ஆரம்பத்தில் வரும் கதாபாத்திரங்களின் உரையாடல்கள்... 

நாயகனின் முழு பயணத்தையும் காண விரும்புவோர் என்னைத் தொடர்பு கொள்க.. 

இனி, நாயகன் உலக நாயகன் ஆன வரலாறு...


மறு சோதனை..

மறு சோதனை

சோதனை பதிவு..

என் பதிவுகள் தமிழ்மணாத்தில் தெரிகிறதா என்று பார்க்கும் சோதனை பதிவு..

Tuesday, October 21, 2008

தீபாவளி வந்தாச்சேய்ய்....

தீபாவள் வர இன்னும் ஒரு வாரம் இருக்கு.. ஆனாலும் இங்க என் அலுவலகத்தில், இன்னைக்கு இருந்து தீபாவளி கொண்டாட்டம் ஆரம்பிச்சாச்சு. இந்த தடவை கல்லூரி முடித்து புதிதாக சேர்ந்தவர்கள் தான் ஏற்பாட்டாளர்கள். 

செம ஜாலியான விஷயங்களா ஏற்பாடு பண்ணிருக்காங்க. இன்னைக்கு எல்லாரும் ஃபார்மல்ஸ்ல வரணும்னு சொல்லிட்டாங்க.. என்னைக்குமே அங்க ஆபீஸ்ல ஃபார்மல் ட்ரெஸ் கிடையாது.. மார்க்கெட்டிங் தவிர, CEO கூட எப்பவும் கேசுவல் ட்ரெஸ் தான்.. 

அது மட்டும் இல்லாம, Cubicle Decoration போட்டி வேற, முதல் பரிசு 5000 ரூபாய்.. எவனுக்காவது விட மனசு வருமா. எல்லாரும் களத்துல குதிச்சாங்க.. சிலர் இதே வேலயா... காலைல இருந்து ரொம்ப சிரத்தையா பண்ணாங்க.. 

என்னோட டீம்ல அவ்வளவா ஆர்வம் இல்லன்னாலும் சாதாரணமா பண்ணோம்.. கீழ படங்கள பாருங்க.. நல்லாருந்தா சொல்லுங்க.. 



Wednesday, September 3, 2008

A for Apple - தொடர்பதிவு



ஒரு வழியா என்னோட இரண்டாவது பதிவு போட்டாச்சு.. ஆனா இந்தப் பதிவு போடுறதுக்கு நான் காரணமே இல்ல... எல்லாம் சின்னக் கலைவாணியோட வேலை..


நான் அடிக்கடி போற வலைத்தளங்கள் தான் இங்க கொடுத்துருக்கேன்.. அடுத்தடுத்து பதிவுகள் வருமாங்கிறது தெரியல.. பார்ப்போம்...

ஆன்மீகம் பற்றிய ஒரு நல்ல பதிவு. வேதங்களில் சொல்லப்பட்டுள்ள கர்மாக்களை பற்றி திரு. திவா அவர்கள் நன்றாக சொல்லியுள்ளார்.


ஆல் டைம் காமெடி.. 


நமக்கு தெரிந்த, தெரியாத மஹானுபவர்களை பற்றிய பதிவு.. ஆச்சார்யர்களின் சிறப்புகளை கூறும் குழுவினர்... இந்த குழுவில் உள்ளவர்கள் என் ஆச்சார்யர்கள்.
B

என்றென்ற்ம் அன்புடன் பாலா, அரசியல் ஆனாலும், ஆண்மீகம் ஆனாலும் சிறப்பாக சொல்பவர்.


தமில் சினிமா பற்றிய சிறந்த வலைத்தளம்.



C
http://chennaithamizhan.blogspot.com/
குட்டி கதைகள் மூலமும், குட்டி கேஷவன் பற்றியும் எழுதி எனக்கு பிடித்தவர்..

D

நான் பார்த்த முதல் தமிழ் பதிவு.

டோண்டூ ஐயாவின் எழுத்துக்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

www.dinamalar.com - Especially doubt dhanabalu section


H

ஹி ஹி.. கொஞ்சம் G.K develop பண்ணலாம்ல..

I

கூடல் குமரன்.. நான் அவர் ஊர்க்காரன்னு சொல்லிக்கிறதுல எனக்கு கொஞ்சம் பெருமை தான்.. 

என்னை பதிவுலகத்துக்கு அழைத்து வந்த பெருமை.. ”கண்ணனையே” சேரும்


வாரா வாரம் ஒரு 17 ரூபாய் மிச்சம் பண்ணலாம்..
என்னை வியக்க வைத்த மனிதர்.. இவரின் பதிவுகளால் நான் பகவானை பற்றி அறிந்து கொண்ட விஷயங்கள் ஏராளம்.. 

கந்தர் அலங்காரத்தை அழகுடன் பதியும் கே.ஆர்.எஸ் அண்ணாவின் பதிவு.

க(வி)தை ராணி
www.maayaa.net
நான் பார்த்தவர்களில் சிறந்த ரங்கன் அண்ண, பிரியா தம்பதியர் போல் வேறு எவரையும் கண்டதில்லை. தெய்வீக குரலால் நம் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை அருளி வருகிறார்.

S

சின்னக் கலைவாணி திவ்யபிரியாவின் பதிவு..

தூப்புல் குலமணி ஸ்ரீவேதாந்த தேசிகர் கோவில், சென்னை.

முக்கண்ணனின் பாடல்கள் பற்றிய பதிவு.


தலைவி கீதாம்மாவின் பதிவுகள்


T




V

கதை நாயகன்..


Friday, January 18, 2008

ஸ்ரீ பெருந்தேவி நாயகி ஸ்மேத ஸ்ரீவரதராஜன்


பெருமாள்: ஸ்ரீபெருந்தேவி நாயகி ஸ்மேத ஸ்ரீவரதராஜ பெருமாள்.. வைராங்கி ஸேவை.

ஊர்: அருமை இராகவன் பிறந்த ஊர்: எமனேஸ்வரம்.

எங்க இருக்கு: மதுரையில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் வழியில் உள்ள, பரமக்குடி அருகில் வைகையாற்றின் மறுகரையில் உள்ளது. 

என்ன ஸ்பெஷல்: வரதராஜன் அன்றி வேறில்லை..

பிளாக்ல என்ன எழுதப்போறேன்: ஏதோ தோணுறத எழுதலாம்னு இருக்கேன். நிறைய சுயபுராணங்கள் இருக்கும்.